Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/செம்மொழி மாநாடு: போலீஸ் அதிகாரிகள் 29ல் ஆலோசனை

செம்மொழி மாநாடு: போலீஸ் அதிகாரிகள் 29ல் ஆலோசனை

செம்மொழி மாநாடு: போலீஸ் அதிகாரிகள் 29ல் ஆலோசனை

செம்மொழி மாநாடு: போலீஸ் அதிகாரிகள் 29ல் ஆலோசனை

ADDED : மே 27, 2010 03:52 AM


Google News

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்பு ஏற்பாடு குறித்த போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், வரும் 29ம் தேதி, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவையில் நடக்கிறது.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27 வரை கோவை "கொடிசியா' வளாகத்தில் நடக்கிறது.

இதில், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும், பல லட்சம் மக்களும் பங்கேற்கவுள்ளனர்.

பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் இருந்து 8,000 போலீசார் வரவுள்ளனர். இவர்கள் மாநாடு அரங்கு, அலங்கார ஊர்தி செல்லும் வழித்தடங்கள், வி.ஐ.பி.,க்கள் தங்கும் அரசு மற்றும் தனியார் விருந்தினர் மாளிகைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபடவுள்ளனர். இதற்காக விரிவான பாதுகாப்பு திட்டம், நகர போலீஸ் சார்பில் தயாராகி வருகிறது.

மாநாடு பாதுகாப்பு தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 29ம் தேதி, கமிஷனர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடக்கிறது. சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், கமிஷனர் சைலேந்திரபாபு, ஐ.ஜி., சிவனாண்டி, கோவை டி.ஐ.ஜி., பாலநாகதேவி, வேலூர் டி.ஐ.ஜி., தாமரைக்கண்ணன், மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்ரமணியம், நெல்லை டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் உள்ளிட்ட 40 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

மாநாடு பாதுகாப்பு திட்டம் குறித்து விரிவான முறையில் ஆராயப்பட்டு, உயரதிகாரிகளுக்கான பொறுப்புகள் வரையறுக்கப்படுகின்றன.

வி.ஐ.பி.,க்கள் தங்குமிட பாதுகாப்பு, வழிக்காவல், மாநாட்டு அரங்கு பாதுகாப்பு, அலங்கார வாகனங்களின் ஊர்வலம், பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கை, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விரிவான முறையில் அலசப்படுகிறது.

மாநாடு பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் இருந்தும் அழைக்கப்பட்டுள்ள போலீஸ் உயரதிகாரிகளில் பலர், கோவை நகரை பற்றி நன்கு அறிந்தவர்கள்; இதற்குமுன் இங்கு பணியாற்றிய அனுபவமிக்கவர்கள்.

இவர்களை முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் அமர்த்தினால் குளறுபடி நேராமல் தவிர்க்க முடியும் என உயரதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் அடிப் படையிலேயே, மாநாடு பணிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் உயரதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோவை நகருக்கு அழைக் கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us